தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

கோவை நாகர்கோவில் சிறப்பு ரயிலில் இன்று முதல் வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மறு மார்க்கமாக நாகர்கோவில், கோவை இடையே வருகிற 31-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வரையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மன்னார்குடி, கோவை இடையே நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரையில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும். கோவை, மயிலாடுதுறை இடையே நவம்பர் மாதம் 13 மற்றும் 7 உள்ளிட்ட தேதிகளில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

கோவை, ராமேஸ்வரம் இடையே நவம்பர் மாதம் இரண்டாம் தேதியும், ராமேஸ்வரம், கோயம்புத்தூர் இடையே நவம்பர் மாதம் மூன்றாம் தேதியும், இரண்டாம் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும். தூத்துக்குடி, எழும்பூர் இடையே இன்று முதல் நவம்பர் மாதம் ஏழாம் தேதி வரையிலும் எழும்பூர், தூத்துக்குடி இடையே நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரையிலும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.

ராமேஸ்வரம், எழும்பூர் இடையே வருகின்ற 31ம் தேதி முதல் நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரையிலும் எழும்பூர் , ராமேஸ்வரம் இடையே வருகிற 30-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரையிலும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஒன்று கூடுதலாக சேர்த்து இயக்கப்படும்.

எழும்பூர், கொல்லம் இடையே நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும், கொல்லம் எழும்பூர் இடையே நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், ஒரு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், எழும்பூர் இடையே வருகின்ற 31 தேதி முதல் 2 தேதி வரையிலும் எழும்பூர், ராமேஸ்வரம் இடையே வரும் 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையிலும், இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஒன்று கூடுதலாக சேர்த்து இயக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தஞ்சை எழும்பூர் இடையே வருகிற 31-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் தேதி வரையிலும், எழும்பூர், தஞ்சை இடையே நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 3 தேதி வரையிலும், இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று கூடுதலாக சேர்த்து இயக்கப்படும். அதேபோல தஞ்சை, எழும்பூர் இடையே வரும் 31ம் தேதி முதல் 2 தேதி வரையிலும் எழும்பூர், தஞ்சை இடையே நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 3ம் தேதி வரையிலும், இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த தகவல் அனைத்தும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் நான்காம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தெற்கு ரயில்வே இந்த சலுகையை அறிவித்துள்ளது.