கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போருக்கான காரணம் என்னவென்றால், நேச நாடுகள் பட்டியலில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போரை ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.27 நாட்களாக இந்த போர் தொடர்ந்து வருகிறது இந்தப் போர் காரணமாக, உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது.
மேலும் உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அதோடு உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட இரு நாடுகளுமே தன்னுடைய ராணுவ வீரர்கள் பலரை இழந்திருக்கிறது.
மேலும் இந்த இரு நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக, உலகளாவிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது. அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்திருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனாலும் கூட தற்சமயம் மீண்டும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் பழைய நிலைக்கு திரும்பி விட்டதாக சொல்லப்படுகிறது, இந்த கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக விவாதம் செய்வதற்காக ஒரு அவசர சிறப்பு அமர்வுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் இன்று கூடவிருப்பதாக சொல்லப்படுகிறது. 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து. உள்ளிட்ட 22 நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்து இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆகவே ஏற்கனவே இந்த அமைப்பின் கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி முதல் மார்ச் மாதம் 2ம் தேதி வரையில் நடந்ததும்,அப்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதும் நினைவிருக்கலாம்.
தற்சமயம் உக்ரைன் மற்றும் மற்ற உறுப்பு நாடுகளால் ஒரு வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு அது சுழற்சிக்கு விடப்பட்டிருக்கிறது என்று ஐநா பொது சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.