நீங்க இன்னும் வாக்காளர் அட்டை வாங்கவில்லையா!! முதலில் இத பண்ணுங்க!!

Photo of author

By Sakthi

Voter List:வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் கொண்ட பட்டியல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது  சென்னை மாநகராட்சி. இந்த பட்டியலில்  பொது மக்கள் தங்கள் பெயர்கள் மற்றும் சுயவிவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.

சரியாக உள்ளதா என்பதை  உறுதி செய்ய பொது மக்கள் பார்வைக்கு சென்னை மண்டல வாரியாக  தொகுதிகள் அடிப்படையில் மக்கள் பார்வைக்கு வைத்தது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் வாக்காளர் சிறப்பு முகாமில்  தெரிவித்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் நாளை ( 16.11.2024) சனிக்கிழமை மற்றும் (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்கள் சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் நவம்பர் 23,24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடைபெறும். சென்னையில் உள்ள 947 வாக்கு மையங்களில் இது நடைபெறும்.

மேலும், 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். அதாவது 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் ( 01.01.2007 தேதிக்கு முன் பிறந்து இருக்க வேண்டும்) விண்ணப்ப படிவம் 6(Form-6) மூலம்  தங்களது பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது பெயர்கள் மற்றும் முகவரியை மாற்றுவது , சேர்த்தல், நீக்குதல் என அனைத்தையும் இந்த முகாம் மூலம் மாற்றலாம். மேலும் பயனாளர்கள் https://voters.eci.gov.in/ என்ற அதிகார பூர்வ தளத்தின் வாயிலாகவும் வாக்காளர்கள், பெயர், சேர்த்தல், நீக்கல்  தொடர்பாக விண்ணப்பங்களைப் விண்ணப்பிக்கலாம்.