சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மிக கனமழை பெய்தது. அன்று பெய்த ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க இயலாமல் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. அதன்பிறகு மழை ஓய்ந்தது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது, நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில், எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய ஆரம்பித்தது. நேற்று காலை சமயத்திலும் சாரல் மழை பொழிந்தது. பனித்துளி போல மழைத்துளிகள் விழுந்ததாக சொல்லப்படுகிறது, காலை 9 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, நேற்று காலை அலுவலகம் சென்றவர்கள் சிரமம் அடைந்தார்கள். குடை உள்ளிட்டவற்றை வீட்டில் வைத்து விட்டு வந்தவர்கள் மழையில் நனைந்தபடி சென்றார்கள்.
சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, கொடுங்கையூர், உட்பட பல்வேறு பகுதிகளில் மற்றும் மாதவரம், புழல், செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலை அணிவித்தது அப்போது நடிகை மேகம் திடீரென்று அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது.
அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்று வீசியது ரம்மியமான வானிலை நிலவியது மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதன்பிறகு சரசரவென்று சத்தத்துடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரையில் நீடிக்கும் என்ற எண்ணத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், உள்ளிட்டோர் அச்சத்தில் இருந்தன.
இந்த சூழ்நிலையில், மழை சட்டென்று அடங்கிப்போனது. மறுபடியும் வானம் மேகமூட்டத்துடன் மிதமான காலநிலை சென்னையில் கனமழை இல்லாமல் மிதமான மழை பெய்தால் தண்ணீர் எங்கும் தேங்காமல் வழக்கம் போல போக்குவரத்து நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரத்தின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.