விரதமிருந்து கணவனை கொன்ற மனைவி! சோகத்தில் குடும்பத்தினர்!

Photo of author

By Jeevitha

விரதமிருந்து கணவனை கொன்ற மனைவி! சோகத்தில் குடும்பத்தினர்!

Jeevitha

Updated on:

The wife killed her husband while fasting! Family in sadness!

 

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்கள் அனைவரும் தனது கணவர் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கருவா சவுத் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவார்கள். அதில் கொவ்சாமி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில் போர் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் குமார் மற்றும் சவிதா. இவர் இரண்டு பேரும் கணவன் மனைவி.

இந்த கருவா சவுத் என்ற பண்டிகையில் நேற்று சவிதாவும் சைலேஷ் குமாரும் கலந்து கொண்டு தங்களின் விரதத்தை முடித்து சந்தோஷமாக வீடு திரும்பி உள்ளார்கள். பிறகு அவர் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு உள்ளார்கள். பிறகு சவிதாவின் கணவர் பக்கத்து வீட்டுக்கு சென்று வருகிறேன் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அதற்கு காரணம் அவர் மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார். பிறகு சைலேஷ்குமாரை அவரது சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.  ஆனால் மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறி விட்டார்கள்.

அவரது மனைவி தனது கணவர் சாப்பாட்டில் விஷம் வைக்க காரணம் அவருக்கு மற்ற பெண்ணிடம் தவறான உறவு இருந்ததால் தான் இப்படி செய்தேன் என சவிதா கூறியுள்ளார். இந்த தகவலை கொண்டு உத்திரபிரதேச மாநில காவல்துறை வழக்கு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.