போடிநாயக்கனூர் அருகே கோர விபத்து! கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்!

Photo of author

By Sakthi

போடிநாயக்கனூர் அருகே கோர விபத்து! கணவன் கண்முன்னே மனைவி பலியான சோகம்!

Sakthi

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேல லர்டு ரமதேவி ஜெயராமன் தம்பதியினர் நான்கு வயதில் பேத்தியுடன் மேலசொக்கநாதபுரம் திலிருந்து போடிநாயக்கனூர் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் வாகனம் போடிநாயக்கனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சின்னமனூரிலிருந்து போடிநாயக்கனூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமதேவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியிறங்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த நிலையில், ஜெயராமன் 4 வயதுப் பேத்தி உள்ளிட்ட இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர் விபத்து தொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ராமதேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதோடு விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் கணவன் கண்முன்னே பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .