20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

0
194
The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!
The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த எழுத்தாளர் டொனால்ட் மீது புகார் அளித்தார். இந்த வழக்கானது 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தான் இதற்கு தீர்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணானவர் தனக்கு 40 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என கேட்டிருந்தார். அதுமட்டுமின்றி இந்த வழக்கு எழுத்தாளருக்கு சாதகமாக அமைந்த நிலையில் இது குறித்து ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது தான் உலகமானது உண்மை நிலைமை என்னவென்று அறிந்து இருக்கிறது. அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இவ்வாறான தவறை ஒருவரும் நம்புவதில்லை.

எனவே அவ்வாறான பெண்களுக்கும் இந்த தீர்ப்பு சமம் என்றவாறு குறிப்பிட்டிருந்தார். மேலும் எழுத்தாளர் நஷ்ட ஈடு கேட்டுள்ளதால் இந்த வழக்கின் மீது மேல்முறையீடு செய்து அதன் தீர்ப்பு வந்தால் தான் நஷ்ட ஈடு வழங்குவோம் அதுவரை வழங்க மாட்டோம் என ட்ரம்ப் தரப்பினர் கூறியுள்ளனர். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாவது, நான் எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்யவில்லை, அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது என் மீது கதை கட்டுகிறார்கள். இவ்வளவு ஏன் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என, எனது குழந்தைகள் மீது கூட சத்தியம் செய்கிறேன் என கூறினார். அதுமட்டுமின்றி நீதிபதியானவர் எனது தரப்பு கருத்துக்கள் எதையும் பெரும்பான்மையாக கேட்க வில்லை என்றும் குற்றம்சாட்டி பேசினார்.

Previous articleதமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!
Next articleசிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?