காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

0
115
The woman who sacrifices this too for a romantic marriage! That too is no ordinary girl!
The woman who sacrifices this too for a romantic marriage! That too is no ordinary girl!

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

ஜப்பானின் பட்டத்து இளவரசர்  புமிஹிடோவின் மகளும் பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்டனர்.

2018ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். ஆனால் கோமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இளவரசியின் காதலர் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, பன்னாட்டு பார்கவுன்சிலில் தேர்வு எழுதியுள்ளார்.

அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரியவும் உள்ளார். இதையடுத்து இளவரசியும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல் வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து சாமானியர்களை மக்களை போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இருபத்தி ஒன்பது வயதான மகோ திருமணம் செய்த பின்னர், இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜப்பான் அரசின் குடும்ப விதிமுறைப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால், அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும்.

அதன்படி இளவரசிக்கு 130 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8. 76 கோடி  இழப்பீடாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிகவும் கிரேட் இல்லையா? தற்போது உள்ள பெண்கள் எல்லாம் சொத்துக்காகவும், தன் எதிர்காலத்திற்காகவும் என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால் அரச குடும்பத்து பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு நடக்காமலும், மேலும் மக்களின் பணம் தனக்கு வேண்டாம் எனவும் சொல்கிறார் பாருங்கள் அவரது வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

Previous articleஇரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!
Next articleடெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?