பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்!
டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களின் அர்த்தங்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதால் அங்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகனங்களில் உள்ள ஆங்கில வார்த்தைகள் தங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு பெண்கள் முகம் சுளிப்பதற்கு காரணம் வண்டி எண்கள் என்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் எண்களில் உள்ள sex என்பது தானாம். நாம் பொதுவாக பதிவு எண் என்பது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் எண் தான்.
அது வண்டியின் பதிவு எண்களில் SEX என்று இடம் பெற்று இருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை மாவட்டங்கள் மற்றும் வாகன வகைகளின் அடிப்படையிலேயே வாகனங்களுக்கு பதிவெண்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வெள்ளை நிற பிளேட்டுகளில் கருப்பு நிற எண்கள் இருந்தால் அது தனிநபரின் வாகனம் என்று அடையாளம் காணப்படுகிறது.
இதே அடிப்படையில்தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு எண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் டெல்லியைப் பொறுத்தவரை முதல் வரும் DL என்ற எண் டெல்லியை குறிக்கிறது. பின்னர் வரும் இரண்டு எண்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும். அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்பது நான்கு சக்கர வாகனத்தையும், S என்பது இரு சக்கர வாகனத்தையும் குறிக்கும்.
அடுத்து வரும் இரண்டு எழுத்துக்களும் அதனுடைய தொடர்ச்சி எண்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது வந்துள்ள புதிய எழுத்துக்கள்தான் புதிய சர்ச்சையை அங்கு கிளப்பியுள்ளன. டெல்லியில் தீபாவளி பரிசாக ஒரு பெண் தன் தந்தையிடமிருந்து இரு சக்கர வாகனம் வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
ஆனால் அதில் இருந்த பதிவு எண்கள் ஆக இந்த sex என்ற எண்கள் இருந்ததன் காரணமாக அந்த வாகனத்தை அந்த பெண் பயன்படுத்தாமலேயே வைத்து விட்டார். இந்த எண்களை ஒன்றாகப் பார்த்தால் எதுவும் தவறு தெரியவில்லை. DL35SEX0000 இது தான் அந்த வாகனத்தின் பதிவு எண். ஆனால் பிரித்துப் படித்தால் அதற்கு முகம் சுளிக்கும் வகையில் தான் பொருள் உள்ளது. அந்த பதிவுகளை பார்த்து மற்றவர்கள் அந்த பெண்ணை கேலி செய்ததன் காரணமாக அந்த வண்டியை பயன்படுத்தாமல் அந்த பெண் ஓரம் கட்டி விட்டார் என்பதும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதிவு எண்ணை மாற்றி தருமாறு அந்த பெண்ணின் தந்தை வாகன விற்பனையாளரை அணுகும் போது, அந்த நபர் இது போன்ற எண்கள் டெல்லி பகுதிகளிலும், வெளி இடங்களிலும் ஆயிரக்கணக்கில் வண்டிகள் போய்க்கொண்டிருக்கின்றன. மேலும் ஆன்லைனில் இந்த எண் வந்ததன் காரணமாக இதை மாற்றி தர முடியாது என அவர் கூறிவிட்டார்.
இது குறித்து டெல்லி போக்குவரத்து ஆணையரிடம் கேள்வி கேட்டபோது, அவர் அதற்கு இவ்வாறு பதில் சொன்னார். ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணை மாற்றி தருவது என்பது சாத்தியமல்ல என்றும், பதிவெண்கள் வரிசையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.