காதலுக்காக ஆணாக மாறிய பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!

0
123

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பதும் மற்றும் ஒரு பெண் மற்றொரு ஆணை காதலிப்பதும் இயல்பான சம்பவம்தான்.

ஆனால் சமீப காலமாக அந்த நிலை சற்று மாறுதலை சந்தித்திருக்கிறது. அதாவது, ஒரு ஆண் மற்றொரு ஆணை காதலிப்பது, ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அதோடு சமீபத்தில் ஓரின சேர்க்கை தவறில்லை என்ற நிலைப்பாட்டையும் அரசு முன்னெடுத்திருக்கிறது.

அந்த வகையில், வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுதா என்பவருக்கும், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த செந்திலா என்பவருக்கும், நட்பு உண்டானதாக கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல் படையில் வேலை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்குமான நட்பு நாட்கள் செல்ல, செல்ல, காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவருடைய விட்டிருக்கும் தோழிகளாக பழகுவது போல தெரிந்த நிலையில், அவர்களுடைய வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது செந்திலா ஜெயசுதாவிடம் ஆணாக மாற வேண்டும் என்று கட்டாயப் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாற்றிக் கொள்வதற்கான அறுவை சிகிச்சையை செய்ய திட்டமிட்டதாக தெரிவிக்கிறார்கள்.

அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையும் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டு வந்துள்ளார் ஜெயசுதா.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜெயசுதா என்ற தன்னுடைய பெயரை ஆதிசிவன் என்று மாற்றி வைத்துக் கொண்டு இருவரும் கடந்த பொங்கல் தினத்தன்று திருப்பரங்குன்றம் பாறைக்கு பின்னாலுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆகவே இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும், எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலாவின் பெற்றோர் புகார் ஒன்றையும் வழங்கினார்கள்.

இந்தப் புகாரினடிப்படையில் இருவரையும் அழைத்து விசாரணை செய்ததில் செந்திலா ஆதி சிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை எனவும், தனது பெற்றோருடன் செல்வதாகவும், தெரிவித்துவிட்டார்.

காதலிக்காக ஆணாக மாறிய ஜெயசுதா தற்சமயம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனக்கு உரிய நீதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவையும் வழங்கியிருக்கிறார் ஜெயசுதா.

Previous articleதிடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!
Next articleமீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!