கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை!
ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஆசிரியர் மாயமானதால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக அந்த ஆசிரியர் தனது மகனுக்கு அவரது வீட்டில் நான்கு மணி நேரம் பாடம் எடுத்து வந்ததாக கூறியுள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் 17 வயதான மகன் தேஷ்ராஜ் ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார் ஆசிரியரும் மாணவருக்கு பாடம் எடுத்துள்ளார்.
இதையடுத்து அன்று மாலை மகன் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆசிரியரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இந்நிலையில் கணவனை பிரிந்து வாழும் அந்த ஆசிரியர் அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் கேட்ட பொழுது அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் போனை வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் தரப்பில் இருந்து காவல் நிலையத்தி புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவருடைய மொபைல் எண்ணை வைத்து காவல்துறையினர் தேட முயற்சி செய்துள்ளனர்.இந்நிலையில் அவர் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.