மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

0
277
The World Health Organization has warned people that fake is too much!
The World Health Organization has warned people that fake is too much!

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் உகாண்டாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் போலித் தயாரிப்புகள் நோயாளிகள் மட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. அதை தடுப்பூசி விற்பனை செய்யும் உண்மையான  உற்பத்தியாளர்கள் சரிபார்க்கவும் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலக சுகாதார அமைப்பிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் உண்மையான உற்பத்தியாளர் இந்த எச்சரிக்கையின் காரணமாக பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகள் போலியானவை தான் என்பதை உறுதியும் படுத்தியுள்ளார்கள். இந்த போலியான தடுப்பூசிகள் இந்தியா மற்றும் உகாண்டாவில் நோயாளிகள் மத்தியில் பதிவாகியுள்ளன.

தடுப்பூசிகளின் அடையாளம் கலவை அல்லது ஆதாரத்தை மோசமாக தவறாக சித்தரித்து அதனடிப்படையில் போலித் தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.2 கலவைகளில் போலி தடுப்பூசி குப்பிகளின் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று 5 மில்லிக்கு கீழேயும், மற்றொன்று 2 மில்லி குப்பிகளிலும் வந்துள்ளது. இதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் பொய்யானவை. ‘கோவிஷீல்டு 2 மில்லி. தொகுதி 4121 இசட் 040, காலாவதி தேதி 10.08.2021’ என்று தவறாக தரப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 2 மில்லி குப்பியாக உற்பத்தி செய்யப்படவில்லை. 4 டோஸ் அடங்கிய குப்பிதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த போலியான தடுப்பூசியினால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பிராந்தியங்களின் விநியோக சங்கிலி களில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அனைத்து மருத்துவ தயாரிப்புகளும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் மற்றும் மருந்தின் உள்ளடக்க தன்மை கவனமாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் இது போலி தடுப்பூசி பற்றிய தகவல்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலியான தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுகாதார அமைப்பின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நோயாளிகளுக்கு கேடு விளைவிப்பதை தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை புழக்கத்திலிருந்து கண்டறிந்து அகற்றுவதும் முக்கியம் எனவும் கூறப்பட்டுள்ளது

Previous articleநான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!
Next articleஇயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு!