விஜய்க்கு  வந்த மிகப் பெரிய  சிக்கல்!!தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயம்!!மகனை கண்டுபிடித்து  தர தந்தை  கண்ணீர் மல்க கோரிக்கை!!

Photo of author

By Sakthi

TVK:விஜய்-யின் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞன் மாயமாகி இருக்கிறார்.

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார்.  இக் கட்சியின்  முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி -யில்  பிரமாண்ட முறையில் நடைபெற்றது . இம்மாநாட்டிற்கு அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 8 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு பங்கு பெற்று உள்ளார்கள். தமிழகம் மற்றும் புதுவை மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தார்கள். இம் மாநாடு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் தான் தவெக மாநாட்டில்  கலந்து கொண்ட இளைஞன் மாயமாகி இருக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக  இருக்கிறது.
அதாவது  திருவாரூர் மாவட்டம்  கரையான் காடு  பகுதியை  சேர்ந்த இளைஞர் மேகநாதன், இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.மேகநாதன் தனது பெற்றோரிடம் தவெக மாநாட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். இந்த நிலையில்  தவெக மாநாடு  முடிந்து 14 நாட்கள் ஆகியும் இளைஞர்  வீடு திரும்பவில்லை.

மேலும் அப்பகுதியை சேர்ந்த 34 பேர் மேகநாதன் உடன் மாநாட்டிற்கு சென்று இருக்கிறார்கள், அவர்கள் வீடு திரும்பிய நிலையில் மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை.  இதனால் அச்சம் அடைந்த மேகநாதனின்  தந்தை புஷ்பநாதன், அவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தன் மகனை கண்டுபிடித்து தருமாறு  புகார் மனுவை போலீசாரிடம் கொடுத்து  கண்ணீர் மல்க  கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில்  இதுவரை  8 நபர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.  மேலும் சாலை விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.