ருத்ரதாண்டவம் ஆடிய க்ரிஸ்கெய்ல்! விழுந்தது ஆஸ்திரேலிய அணி!

0
129

கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் அணியின் தலைவர் நிக்கலஸ் பூரன் நிலையான ஆட்டமும் ஒன்றிணைந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வருவதற்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முந்தி இருப்பதோடு தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முன்னதாக முதலில் மட்டை வீசிய ஆஸ்திரேலியா அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிக ரன்களை அந்த அணியால் சேர்க்க இயலவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகச் சிறப்பான பந்து வீச்சிற்கு பதில் தெரிவிக்க இயலாமல் 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தன்னுடைய இன்னிசை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. இந்த இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணியை 31 பந்துகளில் மீதம் இருந்த நிலையில் வெற்றியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மட்டை வீச்சில் முதலிலேயே மிட்செல் ஸ்டார்க் ப்ளெட்சரை வீழ்த்தினார். இதன் பின்னர் ரெண்டல் சிமெண்ட்ஸ் வெயிலும் ஒன்றிணைந்து 38 ரன்களை சேர்த்தார். சிம்மன்ஸ் விக்கெட்டை கைப்பற்ற 6 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மேற்கிந்தியத் தீவுகள் பறிகொடுத்து இருந்தது.

இருந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ரிஸ்கெய்ல் இந்த போட்டியில் தன்னுடைய பாமிர்க்கு திரும்பியிருந்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சிதறடிக்க இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி மிக வேகமாக முன்னேறியது. அதிலும் குறிப்பாக தன்னுடைய அரைசதத்தை ஏற்ற முயற்சி செய்து 3 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் க்ரிஸ்கெய்ல். 12-வது ஓவரில் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல் ஆட்டம் இழந்து இருந்தாலும் அந்தக் கட்டத்தில் இது அவர்களின் 33 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற சூழலில் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது.

இதன் பின்னர் அந்த அணியின் கேப்டன் பூரனும் ரஸ்ஸலும் ஒன்றிணைந்து 15வது ஓவரில் வருவதற்குள் குறிப்பிட்ட இலக்கை விரட்டி ரன்களையும் எடுத்து முடித்தார்கள். இந்த போட்டியில் 67 ரன்கள் எடுத்த கிறிஸ் கெயில் டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Previous articleமுன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி!
Next articleநெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!