தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

Photo of author

By Janani

தொட்டதெல்லாம் பொன்னாகும் தேய்பிறை சஷ்டி..!! இந்த நாளை தவிர விடாதீர்கள்..!!

Janani

முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சிறந்தது மற்றும் உயர்ந்தது என்றால் சஷ்டி. அதிலும் தேய்பிறை சஷ்டி அன்று முருகனை நினைத்து வழிபட்டு, ஒரு சிறிய மற்றும் எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நமக்கு தேவையான வீரம், விவேகம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் தரக்கூடிய அதிபதி என்றால் அது முருகப் பெருமான் தான்.

மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி முருகனை வழிபடும் பொழுது, நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். திதி விரதம், நட்சத்திர விரதம், வார விரதம் என மூன்று முறைகளில் முருகப்பெருமானை வழிபடலாம்.

தேய்பிறை சஷ்டி திதி அன்று முருகனை வழிபட்டால் செல்வ வளம் பெருகும், திருமணம் மற்றும் வாழ்க்கை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தீராத பிரச்சனைகளையும் தீர்த்துக் கொடுப்பவர் இந்த முருகப் பெருமான்.எனவே இவரை தேய்பிறை சஷ்டி அன்று வாழைப்பழம் தீபம் ஒன்றை ஏற்றி வழிபடுவதன் மூலம், சகல விதமான சௌபாக்கியங்களையும் நாம் பெற முடியும்.

“யாமிருக்க பயமேன்” என்று முருகப்பெருமான் கூறுவது போல, இவரை தொடர்ந்து ஆறு சஷ்டி திதிகளில் வழிபடுவதன் மூலம் நாம் வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.

தேய்பிறை சஷ்டி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு செவ்வாழைப் பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு சர்க்கரை மற்றும் நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.

இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.