அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!!

0
333
Then DMK today BJP.. Vijay expressed direct opposition!! Foundation laying foundation for alliance with EPS!!
Then DMK today BJP.. Vijay expressed direct opposition!! Foundation laying foundation for alliance with EPS!!

 

அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!!

தமிழகத்தில் புதிதாக வளர்ந்து வரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது.ஏனெனில் இந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் உள்ளது.பொது மக்களுக்கும் கொரானா கால கட்டத்தில் கூட அவரின் ரசிகர் மன்ற தொண்டர்கள் அதிக உதவிகள் செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்கள் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் பல பரிசு பொருட்களை இந்த இரண்டு ஆண்டுகளாக தனது சொந்த பணத்திலிருந்து வழங்கி வருகிறார்.இதனால் பல ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்று உள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உதவிகளை இரண்டு நாட்களாக பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.அதில் முதல் கட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் (28.06.2024)முடிந்து விட்டது.இந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது சந்திப்பு சென்னையில் இருக்கும் திருவான்மியூர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (03.07.2024) காலை 7 மணியளவில் தொடங்கி,தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டுள்ள, நடிகர் விஜய் அவர்கள் பேசும் போது ஒன்றிய அரசான ஆளும் பாஜகவை பற்றி கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார்.அதாவது இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெறும் நீட் தேர்வானது ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேறாமல் தடுக்கும் ஒரு ஆயுதமாக நீட் தேர்வு உள்ளது.

அதனை ஒன்றிய அரசு மத்திய பட்டியலிருந்து நீக்கி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.ஏனெனில் இதற்கு முன்பு கல்வியானது 1975 வரை மாநில பட்டியலில் தான் இருந்து வந்தது.ஆனால் இதனை தற்போது மத்திய அரசு அதை பொது பட்டியலில் இடம் பெற செய்துள்ளது.இது மொத்தமாக மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயல் என கண்டித்துள்ளார்.

இந்த கருத்து மூலம் மத்திய அரசுக்கு எதிரான இவரின் நிலைப்பாடு தெளிவாகியுள்ளது.இதன் மூலம் இனி வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என ஒரு சில சமூக ஊடகங்கள் கூறி வருகின்றன.ஏனெனில் அதிமுக தலைமையும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல கள்ளகுறிச்சி விவகாரத்திலும் திமுக-விற்கு எதிராகவே இவர் தனது கருத்துக்களை தெரிவித்திருப்பார்.

Previous articleதிரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!!   
Next articleநாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி