காவல்துறையில் 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்! விண்ணப்பம் செய்ய ஏப்ரல் மாதம் 7ம் தேதி கடைசி நாள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலமாக காவல் துறையில் காலியாகயிருக்கின்ற 444 துணை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அதோடு 3ம் பாலினத்தவர்கள் தேர்வு செய்யப்படயிருக்கிறார்கள்.

இதுதொடர்பான விண்ணப்பங்கள்www.tnusrb.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. வயது, கல்வித் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரையில் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தகுதிதேர்வு நடக்கவிருக்கிறது. இதில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான தேதி ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பதாரர்களுக்கு உதவிசெய்ய சென்னை எழும்பூரில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரையில் உதவி மையங்கள் செயல்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு 044-40016200, 044-28413658 உள்ளிட்ட எங்களில் விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.