கைலாசாவில் எந்தவித வரியும் இல்லை! அனைத்தும் இலவசம்! நித்தியானந்தா பேட்டி! 

Photo of author

By Sakthi

கைலாசாவில் எந்தவித வரியும் இல்லை! அனைத்தும் இலவசம்! நித்தியானந்தா பேட்டி!
கைலாசா நாட்டில் எந்த விதமான வரியும் இல்லை என்றும் மேலும் அனைத்தும் இலவசம் என்றும் கைலாசா நாட்டின் அதிபர் நித்தியானந்தா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
குற்ற வழக்கில் தொடர்புடைய நித்தியானந்தா அவர்கள் இந்தியாவிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று கைலாசா என்ற பெயரில் நாடு வாங்கியுள்ளதாகவும் அந்த நாட்டுக்கு நான் தான் அதிபர் என்றும் கூறினார். பின்னர் அவ்வப்போது பேட்டி அளித்து வீடியோ வெளியிட்டு வரும் நித்தியானந்தா அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதும் வழக்கமாக இருக்கின்றது.
அதாவது தன்மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தியானந்தா அவர்கள் கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து தப்பித்து சென்றார். இன்று வரை நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கைலாசா நாடு எங்கு உள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நித்தியானந்தா அவர்கள் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் நித்தியானந்தா அவர்கள் “கைலாசா நாடு எங்கு உள்ளது என்பது குறித்த அறிவிப்பை நான் குருபூர்ணிமா நாளில் அறிவிப்பேன். மேலும் கைலாசாவில் குருகுலம், இந்து பல்கலைகழகம் ஆகியவை அமையவுள்ளது. மேலும் தொழில் செய்வதற்கு உதவியாக உலக வர்த்தக மையம் அமையவுள்ளது.
கைலாசா நாட்டில் தங்குவதற்கு இடம், சாப்பிட உணவு, மருத்துவம், உடுத்த உணவு என்று அனைத்தும் இலவசம். விலை என்பது இல்லை. அது மட்டுமில்லாமல் இராணுவம், காவல்துறை, ஜெயில் என்ற எதுவும் இல்லை. தவறு பெய்தாலும் தண்டனை இல்லை. ஜெயில் இல்லை.
மேலும் கைலாசா நாட்டில் தொழில் வரி, வருமான வரி, ஜிஏஸ்டி என்று எந்தவிதமான வரியும் விதிக்கப்படுவது இல்லை” என்று சமீபத்திய வீடியோ ஒன்றில் அவர் கூறியுள்ளார்.