Virat Kohli: கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விராட் கோலி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கினார். தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இவர் இவர் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகள் சிறப்பாக விளையாடி வரும் இவர் சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இ முழுமையாக கிரிக்கெட்டை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும், தன் குடும்பத்தினருடன் லண்டன் நாட்டில் குடிபெயர இருப்பதாகவும். அங்கு சென்று பிஸ்னஸ் செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தன் மனைவி அனுஷ்கா சர்மா வுடன் சேர்ந்து லண்டன் நாட்டில் உள்ள சில தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் விராட் கோலி சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா. எனவே விராட் கோலி தனது குடும்பத்திற்காக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு லண்டன் செல்வது உறுதியாகி இருக்கிறது. இச் செய்தியை அறிந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.