pmk: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். நூற்றுக்கணக்கான பாமக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
மேடையில் பேசிய ராமதாஸ் அதானி வழக்கு சிபிசிஐடி மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10,5 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிறகு பாமக கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் ராமதாஸ். அதற்கு அன்புமணி கட்சியில் இணைந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது.
அதற்குள் உயர் பதவியை கொடுப்பதா? எனக் கேள்வி எழுப்பினார். கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இளைஞர் அணித் தலைவராக்குங்கள் என கோபமாக பேசினார். அதற்கு கோபமுற்று பேசிய ராமதாஸ் பாமக கட்சியை நிறுவியது நான். நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லை என்றால் கட்சியை விட்டு வெளியேறலாம் என கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
அடுத்து பேசிய அன்பு மணி பனையூரில் புதிய கட்சி அலுவலகம் திறந்து வைத்து இருக்கிறேன் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வந்து சந்தியுங்கள் எனக் கூறி இருந்தார். இதனால் அன்பு மணிக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பிரிவு கட்சியினரும் ராமதாஸ்க்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவு கட்சியினரும் கோஷம் எழுப்பிய கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது பாமக இளைஞர் அணி தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்டு இருக்கும் முகுந்தன் பரசுராமன் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகன் ஆவார். இதற்கு முன்பு பாமக இளைஞர் அணி தலைவராக ஜி.கே மணி அவர்களின் மகன் தமிழ் குமரன் சமீபத்தில் தன அப் பதவியில் இருந்து விலகினார். அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதல் கருத்து சேலம் எம்.எல்.ஏ அருள் பேசுகையில் இது வெறும் கருத்து மோதல் தான் எனக் கூறி இருக்கிறார்.