அதிமுகவுடன் மெகா கூட்டணி அமைக்குமா தவெக; ஹின்ட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!

0
36
there-is-a-possibility-of-forming-an-tvk-party-alliance-with-the-aiadmk-in-the-2026-assembly-elections
there-is-a-possibility-of-forming-an-tvk-party-alliance-with-the-aiadmk-in-the-2026-assembly-elections

சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றார். அந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

முதல் நாள் கூட்டத்தில் ஜூன் மாதம் இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது அப்போது விஜய் மற்றும் தவெகவினரை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளார். அதற்கு மாறாக திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை அதிகரிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் விரும்பியதைப் போல அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதனால் நம்பிக்கையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக கூட்டணிக்குள் தவெக நுழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தவெக தலைவர் விஜய் அதிமுகவை பற்றி எந்த ஒரு விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleராமதாஸ் உயிருக்கு பெரும் ஆபத்து.. ஸ்கெட்ச் போடும் அன்புமணி பொண்டாட்டி!! அலர்ட் செய்த மணிகண்டன்!!
Next articleபாமக _ விற்கு 2 பொருளாளர்?? ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிவிப்பு!!