இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்!

Photo of author

By Pavithra

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்!

Pavithra

Updated on:

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்!

உலக நாடுகளில் பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் தேவை குறைப்பு காரணமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இந்த மந்தநிலையை சரி கட்ட நேற்று விய்யனாவில் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் (ஒபேக்) கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.வருகின்ற நவம்பர் மாதம் முதல்
கச்சா எண்ணெய் உற்பத்தி 20 லட்சம் பீப்பாக குறைக்க உள்ளதாகவும்,அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மேலும் கச்சா எண்ணெயின்
மந்ததன்மை மற்றும் விலை குறைப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை கண்ணோட்டங்களை சுற்றியுள்ள நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க இருப்பதால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறையும்.இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல் டீசலின் விலை கடும் உயர்வை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.