GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

Photo of author

By Janani

GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

Janani

There is a sudden problem in the release of GOAT film.

 

GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்,இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பல கோடி ரூபாய் வசூலை அள்ளி குவிக்கின்றன.மேலும் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது.மேலும் இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் .

விஜய் அவர்கள் தற்பொழுது தீவிர அரசியலிலும் இறங்கி உள்ளார்.அந்த வகையில் தமிழ் நாட்டில் நடைபெறும் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையினை கடந்த இரண்டு வருடங்களாக தருகிறார்.இது பல மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர் நடித்து வரவிருக்கும் புதிய படம் GOAT,இதனை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் மறைந்த முன்னாள் நடிகரும்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI(Atrifical Intelligence) தொழில் நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்து காண்பித்து உள்ளனர் என தகவல் தெரிய வந்துள்ளது.ஆனால் இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும்,இதனை பரப்பினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.