
TVK ADMK: கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில், 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 1 மாதமாகியும் அதனை பற்றிய செய்தி வந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமான கட்சியின் தலைவர் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விஜய்யின் குரலாக ஒளித்து வருவதை அறிய முடிகிறது.
மேலும் அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இது குறித்து விஜய் எதுவும் கூறாத நிலையில், விஜய்க்கு இதில் விருப்பமில்லை என்று அவரை சார்ந்தவர்கள் கூறி வந்தனர். மேலும் அதிமுக-தவெக கூட்டணி அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், யாரை கேட்டு இபிஎஸ் இதனை உறுதி செய்தார் என்று விஜய் கோபப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் விஜய்யின் கூட்டணி குறித்து அவரை தவிர அனைவரும் பேசி வருகின்றனர்.
விஜய் மௌனம் காப்பதன் பின்னணி என்னவென்று ஆராயும் போது, இபிஎஸ் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக பலவீனமடைந்ததை உணர்ந்த விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. மேலும் திமுக தனது அரசியல் எதிரி என்று பகிரங்கமாக கூறிய விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணி இல்லையென்று சொல்ல நீண்ட நேரம் ஆகாது என்றும் பேசப்படுகிறது.
