தமிழ்நாட்டில் இனி இதற்கு தடையே இல்லையாம்! வெளியான அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

0
183

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் காரணமாக, மின் சாதனங்களில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புபணிக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதற்காக அந்த பணி நடைபெறும் பகுதிகளில் இருக்கின்ற மின் இணைப்புகளில் காலை முதல் மாலை வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த மின் தடையை தொடர்பான விபரம் மின் வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதிகளிலும் மின்தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவித்திருக்கிறது.

இதற்காக தேர்தல் முடியும் வரையில் மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Previous articleதமிழகத்திற்கு வந்த புதிய ஆபத்து! மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? வெளியான பரபரப்பு தகவல்!
Next articleஅதுபற்றி சசிகலாவிடம் கேள்வி எழுப்புங்கள் நான் என்ன அவருடைய…! பத்திரிக்கையாளர்களிடம் கடுப்பான டிடிவி தினகரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here