கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூலை மாதம் தொர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , ஜூலை மாதமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய இயலாததால் சனிக்கிழமை அன்று மதுவை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்க மக்கள் அலை மோதி வருகின்றனர்.சனிக்கிழமை மட்டும் விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்ததாக டாஸ்மாக் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மதுவை அதிகபட்சமாக வாங்கிய மாவட்டங்களில் மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடியும், திருச்சியில் ரூ.41.57 கோடியும் மதுபானங்கள் விற்பனை செய்துள்ளனர்.
இதே நேரத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ரூ.188.86 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆறு வாரங்களில் இல்லாத விற்பனை நேற்று ஒரே நாளில் அதிகமான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.