இந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
127

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. ஆகவே மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு, மதுரை, போன்ற பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, போன்ற வட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு நகர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபடித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..
Next articleஆளும் தரப்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்த அண்ணாமலை!