நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

Photo of author

By Pavithra

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு,தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து,40% அரசு பேருந்துகள் மட்டும் மாவட்டத்திற்குள்ளே இயங்கும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும்
மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் என்று,கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அறிக்கை ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் விரைவு போக்குவரத்து கழகம் இதுகுறித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதவாறு,
300 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கும் பேருந்துகளை ஏசி பேருந்துகளாக எஸ்.சி.டி.சி மாற்றியுள்ளது.சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி அரசின் மறு உத்தரவு வரும்வரை ஏசி பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லையென்று விரைவு போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

வெப்பநிலை குறைவாக உள்ள இடத்தில் கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்பு இருப்பதால் ஏசி பேருந்து இயக்குவதில் சற்று கூடுதல் கவனமும், பராமரிப்பும் தேவைப்படுகின்றது.இதனால் சுகாதாரத் துறையின் முறையான வழிகாட்டுதலின்படி அரசு அனுமதி அளித்தால் மட்டுமே ஏசி பஸ்கள் இயக்க முடிவு செய்யப்படும்.அதுவும் இம்மாதம் ஏசி பஸ்கள் இயக்க வாய்ப்பு இல்லை என்றும், அக்டோபர் மாதத்திலிருந்து ஏசி பஸ்கள் இயக்கலாமா என முடிவு செய்யப்படும் என்றும் விரைவு போக்குவரத்து துறை கூறியுள்ளது.

மேலும் ஏசி பஸ்களுக்கான முன்பதிவை நிறுத்தி வைக்க வேண்டுமென்று போக்குவரத்துகிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் பேருந்துகளின் இயக்கம் துவங்கப் போவதில்லை என்றும்,முதல் கட்டமாக பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப பஸ் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.