பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு!

Photo of author

By Hasini

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு!

மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் ஒரு நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் அது பேச்சு பொருளாக மாறியுள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி மிகவும் பரபரப்பாகி வருகின்றன. தாஸ் அந்த முழு வீடியோவிலிருந்து 6 நிமிட யூடியூப் கிளிப்பிங்கை மட்டும் தற்போது வெளியிட்டு உள்ளார்.

அவர் நாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் உள்ளது குறித்தும் பேசியுள்ளார். அதனுடன் சேர்ந்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள், கோரோனாவை எதிர்த்து போராடிய விதம், மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் மற்றும் நகைச்சுவை பேச்சாளர்களின் மீது உள்ள அடக்குமுறைகள் போன்ற பல விஷயங்களையும் அதில் விரிவாகப் பேசியுள்ளார்.

இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஆதித்யா ஜா என்னும் நபர் ஒரு புகார் ஒன்றை அவர் மீது அளித்துள்ளார். அதில் நடிகரும் நகைச்சுவை பேச்சாளருமான வீர் தாஸ் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா குறித்து பேசியுள்ளார். இந்தியர்கள் பகலில் பெண்களை வணங்குவார்கள். ஆனால் இரவில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

இது போன்ற கூற்றுகளை அவர் சர்வதேச அரங்கில் பேசி பெண்களையும், நமது நாட்டையும் இழிவுபடுத்தி உள்ளார் என்றும் அதன் மூலம் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் தீபக் யாதவ் கூறும்போது தற்போதைக்கு புகார் தரப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேடை காமெடியன் ஆன வீர் தாசுக்கு இணையத்தின் மூலம் ஆதரவுகள் பெருமளவு பெருகியுள்ளன. முன்னதாக சசி தரூர் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் கபில் சிபில் கூட தனது ஆதரவுகளை தெரிவித்து உள்ளார். மேலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீர் தாஸ் இந்தியா இரண்டாக உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. உலகத்திற்கு அதைப்பற்றி ஒரு இந்தியர் சொல்லித்தான் தெரிய வேண்டியதும் இல்லை. நாம் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும், பாசங்குகாரர்களாகவும் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

https://twitter.com/KapilSibal?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460819671662301184%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F11%2F17172420%2FVir-Das-finds-support-in-Kapil-Sibal-in-Two-Indias.vpf