இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது!
நாடாளுமன்றத்தில் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிர் கட்சிகள் ஏதாவது ஒரு வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். அதுவும் முக்கியமாக அரசியல் பிரச்சனைகளை இங்கே பொது கூட்டத்தின் போது அனைவர் முன்னிலையிலும் கேள்வியாக எடுத்து முன் வைக்க தவறமாட்டார்கள். இந்நிலையில் கடந்த மழைகால கூட்டதொடரில் பல்வேறு பிரச்சனைகளை கலந்தாலோசித்தனர்.
அதில் அவசியமான விசயமாக பெகாசிஸ் உளவு செயலி குறித்து பேசியே நாட்கள் முழுவதும் கடந்தது. தற்போது மீண்டும் மழைகால கூட்டத் தொடர் ஆரம்பித்ததும், முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக 12 எம்பிக்கள், நடப்பு கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதுவும் எம்.பி. கள் 12 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநீக்கம் செய்யப் பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்பிக்கள், தலா இரண்டு பேர் திரிணாமுல் காங்கிரஸ்மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மேலும் அதில் தலா ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.
இன்று மாநிலங்களவை கூடியதும் 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினையை அவை தலைவர் முன் வைத்தார். மேலும் அவர் அதற்கென உள்ள விதி 256 ன் படி 12 எப்.பி.கள் இடை நீக்கம் செய்யப்பட்ட விஷயத்தில் விதி மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
ஆனால் அவை தலைவரோ அவர்கள் இடை நீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை என்று அவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் யாருமே வருத்தம் என்று ஒரு வார்த்தை பேருக்கு கூட தெரிவிக்கவில்லை.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் முறையீட்டை மட்டும் வைத்துக்கொண்டு நான் இதில் பரிசீலிக்க எதுவுமே இல்லை. அதன் காரணமாக இடைநீக்கம் ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.