எங்களுடைய வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டார்கள்! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலின் பொழுது வெளியிட்ட வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து பாஜக கட்சி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி பலவிதமான வாக்குறுதிகளை வெளியிட்டது. கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், நகைக்கடன் போன்று பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது.
இதையடுத்து இன்று(ஜூலை23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் “நாடாளுமன்றத் தேர்தலின். பொழுது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை அப்படியே பாஜக அரசு காப்பி அடித்து பட்ஜெட்டை தயார் செய்துள்ளது என்பது நன்றாக தெரிகின்றது.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டை தயார் செய்யவில்லை. பாஜக கட்சி தன்னுடைய அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாஜக அரசு இந்த பட்ஜெட்டை தயார் செய்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஒரே ஒரு கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதாவது 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தோம். அந்த போராட்டத்திற்கு பிறகு தற்பொழுது இன்று(ஜூலை23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது” என்று கூறினார்.