DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை பலராலும் பேசப்பட்டு வருகிறது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததை எதிர் கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் திமுக கூட்டணி அவ்வாறு இல்லை என்று கூறப்பட்டு வந்த சமயத்தில் தான் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பிறகு முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் மீதிமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என கூறி மேலும் சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த சூடு தணியாத நேரத்தில் தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்போம் என்று கூறினார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாத திமுக தலைமை குழப்பத்தில் இருந்தது. தற்போது புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சி திமுகவிலிருந்து பிரிந்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக பேசப்பட்டு வருகிறது. திமுக அரசு காங்கிரஸ்யை மட்டுமே நம்பியிருக்கும் இந்த சூழ்நிலையில் காங்கிரஸின் இந்த முடிவு திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. திமுகவில் மீதமிருக்கும் கூட்டணி கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து தான் தேர்தலை வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டிய நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் பிரிவதை அறிந்த இந்த இரண்டு கட்சிகளும் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.