Sakshi Agarwal: என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்..!

Photo of author

By Priya

Sakshi Agarwal:ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் (Actress Sakshi Agarwal) தான் ஷாக்ஷி அகர்வால். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் இவர் சினிமா துறையை தேர்வு செய்தார்.

இவர் முதன் முதலில் மளையாளத்தில் ஓராயிரம் கோணல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாக்ஷி. அதன் பிறகு மாடலில் துறையில் பிஸியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தார். அப்போது தான் பிரபல தனியார் தாெலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஷாக்ஷி போட்டியாளராக பங்கேற்றார். அதன் மூலம் அனைவரின் மத்தியிலும் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் ஷாக்ஷியை ஏராளமான இளைஞர்கள் பலோவ் செய்து வருகிறார்கள். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை அவ்வப்போது அவர் பகிர்ந்து வருவார். இந்நிலையில் ஒரு முறை அவர் ராஜா ராணி படம் பற்றிய தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது பற்றி பகிர்ந்துள்ள ஷக்ஷி, நான் பெங்களூருவில் மாடலிங் செய்துக்கொண்டிருக்கும் போது, சென்னையில் இருந்த காஸ்டிங் ஏஜென்சி மூலம் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் முதலில் என்னிடம் கூறியது இந்த படத்தில் ஆர்யா தான் நடிகர், இந்த படத்தில் நீங்கள் இரண்டாவது ஹூரோயினாக நடிக்க போகிறீர்கள் என்று கூறினார்கள். நானும் அவர்கள் கூறியது உண்மை என்று நினைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் சென்றேன். அதன் பிறகு ஷூட்டிங்க்கு அழைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை.

அந்த சமயம் எனக்கு தயாரிப்பு பற்றி எதுவும் தெரியாது. சினிமாவிற்கு புதுசு என்றும், நான் அப்பொழுதே இயக்குநர் அட்லியிடம் இதை பற்றி கேட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இவர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Muthu Movie: ரஜினியின் நண்பனாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.. அந்த காரணத்தால் தான் விலகினேன்..!