மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!

Photo of author

By Sakthi

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!
காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் காங்கிரஸ் கட்சி பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஹாவேரி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “கர்நாடகத் தேர்தல் பரப்புரையின் பொழுது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். மந்திரி சபையில் ஒப்புதல் மட்டும் தான் அளித்துள்ளனர்.
ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது போல நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக கட்சியின் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகின்றது. பாஜக கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொண்டீவந்த நலத்திட்டங்களை நிறுத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் “கர்நாடக மாநிலத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில்   வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார்.
அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி. அவர்களின் ஆட்சி சரியான பாதையில் செல்லவில்லை. அவர்கள் நடத்தும் ஆட்சியின் விதம், பதவிக்கான மோதல் ஆகிய காரணங்களால் காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்கள் ஆட்சியில் நீடிக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.