தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் சமீப காலமாக அதிலும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அதிலும் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது அதேசமயம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற பல சம்பவங்கள் வருத்தம் அளிக்கும் விதமாக இருந்து வருகிறது.
அந்த விதத்தில் சத்தீஸ்கரின் பாஜகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து வருபவர் ராம விசார் இவருடைய வீடு சர்குஜா மாவட்டத்தில் அம்பிகாபூர் நகரில் இருக்கிறது சம்பவம் நடைபெற்ற அன்று பாதுகாவலர்கள் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் கூட பாதுகாவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு சில மர்ம நபர்கள் உள்ளே சென்று வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்திருக்கிறார்கள். இதன் பிறகு அந்த வீட்டிலிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த அம்பிகாபூர் நகர காவல் துறையினர் அகிலேஷ் சிங் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் பாதுகாவலர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அகிலேஷ் தெரிவித்திருக்கிறார்.