இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!

0
172

இந்தியாவைப் பொருத்தவரையில் பாகிஸ்தான் எப்போதும் நம்முடைய பங்காளி நாடாகவே விளங்கி வருகிறது.

அதாவது, எப்போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையை தான் இதுவரையில் நாம் கண்டிருக்கிறோம்.

அந்த நாட்டைச் சேர்ந்த பலர் தீவிரவாதிகள் இந்தியாவை எவ்வாறு அழித்தொழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்த சிந்தனைக்கு அப்பாற்பட்டு இந்தியா மெல்ல, மெல்ல, வளர்ந்து வருகிறது. இது பல சமயங்களில் பாகிஸ்தானுக்கு ஆச்சரியத்தை வழங்கியுள்ளது.

ஆனால் இதுவரையில், பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் இந்திய நாட்டை எப்போதும் பாராட்டியதில்லை. இருந்தாலும் தற்போது முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதனை செய்திருக்கிறார்.

அதாவது லாகூரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டியிருக்கிறார்.

இம்ரான்கான் உரையாற்றும்போது, அமெரிக்காவின் நண்பனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பொருளாதார தடைகளை கடந்து ரஷ்யாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் அந்த நாட்டின் முடிவுகள் பொது மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தான் இருக்கும். ஆனால் நம்முடைய நாட்டின் கொள்கை ஒரு சிலரின் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் தற்போதைய பாகிஸ்தான் பிரதமரை மறைமுகமாக இதன் மூலமாக தாக்கிப் பேசியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நான் பின்பற்றியதால் தான் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் மக்களுக்காக கொள்கை முடிவு எடுப்பது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் இம்ரான்கான்.

Previous articleவிற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள்! தயாரிப்பு நிறுவனம் வேதனை!
Next articleஇன்று தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! எதற்காக தெரியுமா?