பிப்ரவரி மாதத்தில் வரவிருக்கும்நோய்த்தொறு மூன்றாவது அலை!

0
196

காட்டுத் தீயை போல ஒமைக்ரான் நோய்தொற்று வேகமாக உலக நாடுகளுக்கு இடையே பரவிவருகிறது வைரஸ் பரவல் பல நாடுகளை மீண்டும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தியிருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் 21 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்,, மும்பையில் மேலும் இரண்டு நபர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், மும்பையில் மேலும் இரண்டு நபர்களுக்கு நேற்றைய தினம் இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அந்த 37 வயது உடையவர், மற்றொருவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 36 வயது உடையவர், இருவருமே நோய்த்தொற்று தடுப்பூசி முழுவதுமாக செலுத்திக் கொண்டவர்கள் அவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மும்பையில் இருக்கின்ற செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகின்றோம் இவர்களுடன் முதல் நிலை தொடர்பில் இருந்த 5 பேரும், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 315 பேரும், அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும்போது புதிய வகை தொற்று நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்படும். தற்சமயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் வைரஸ் பரவலை பொறுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களிடம் ஆலோசனை நடத்தி தேவைப்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியாவில் இந்த புதிய வகை தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்திருக்கிறது.

ஒமிக்ரான் தொற்றால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நாட்டில் பிப்ரவரி மாதத்திற்குள் உச்சத்தை எட்டக்கூடும். அதோடு மேலும் நாட்டில் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் வரையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆனாலும் இது இரண்டாவது அலையை விட லேசானதாக இருக்கும் இந்த புதிய வகை நோய் தொற்று வேகமாக பரவி வந்தாலும் டெல்டா வைரஸில் காணப்பட்ட தீவிரம் இதில் இல்லை. தென்னாப்பிரிக்காவில் அதிக அளவில் இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை, உள்ளிட்ட தரவுகள் புதிய வகை வைரஸ் தொடர்பான தெளிவான பிம்பத்தை நமக்கு தரும் என்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியான மனிந்திர அகர்வால் கூறியிருக்கிறார்.

Previous articleஇன்று மழை பெய்ய விருக்கும் தமிழக தென் மாவட்டங்கள்!
Next articleவிவசாயிகள் இதை செய்தால் மானியத் தொகை உயர்த்தப்படும் அமைச்சர் உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here