பொதுவாகவே அனைவருக்கும் கோவிலில் பிரசாதமாக தரும் திருநீறை எந்த விரலில் வைப்பது என்று பெரும்பாலோனோர் குழப்பம் அடைவர்.
எந்த விரலைப் பயன்படுத்தி திருநீறு வைக்கவேண்டும் எந்த விரலை பயன்படுத்தி திருநீறு வைக்கக்கூடாது என்பதை இப்பதிவில் காணலாம்.
திருநிறு வைக்கும் முறை :
கோவிலில் பிரசாதமாகத் தரும் திருநீறை வலது கையில் வாங்கி இடதுகையில் மாற்றாமல் வலது கையை வைத்து விரலை மடக்கி விபூதியை தொட்டு நெற்றியில் வைக்க வேண்டும்.
திருநீறு வைக்க பயன்படுத்தப்படும் ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு அதைப் பற்றி காண்போம்.
கட்டைவிரல் : கட்டைவிரலை பயன்படுத்தி திருநீறு வைக்கும் போது உடலில் தீராத வியாதிகள் ஏற்படும்.
ஆள்காட்டி விரல் : ஆள்காட்டி விரலால் விபூதியை வைக்கும்போது செல்வங்கள் நாசமாகும்.
நடு விரல் : நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்.
மோதிர விரல் : மோதிர விரலால் திருநீறு தொட்டுப் வைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் பெருகும்.
மோதிர விரலும் கட்டை விரலும் : இரண்டு விரலும் விபூதியை பூசினால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெறும்.