ஜாதி வெறிபிடித்த கூட்டத்தின் ஜாதி பசிக்கு நான் இறையாக மாட்டேன்….! திருமாவளவன் அதிரடி…!

Photo of author

By Sakthi

பெண்களை விபச்சாரிகள் என்று தான் பேசினேன் என்று ஒரு பொய்யான தகவலை சமூக விரோத கும்பல் பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.

மனு தர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தெரிவிக்கின்றது என்பதே பெரியார் இணையதள சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் திருமாவளவன் தெரிவித்து இருப்பது இந்நிலையில் பெண்களை இழிவு படுத்துகின்ற மனுதர்மம் என்ற நூலினை எரிக்கும் ஆர்ப்பாட்டமானது நாளை நடைபெற இருக்கின்றது என திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என திருமாவளவன் பேசியிருக்கிறார் ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது வலைதள பக்கத்தில் திமுகவை டேக் செய்து ஒரு பதிவினை இட்டிருக்கின்றார்.

நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பதிவில் திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் ஸ்டாலின் அவர்களே இந்து பெண்களை பற்றி திருமாவளவன் அவர்கள் கொச்சையாக கூறியிருக்கும் கருத்தினை திமுக ஏற்கிறதா அப்படி இல்லையெனில் மதரீதியான கலவரங்களை தூண்டிவிடும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவிப்பீர்களா என்று கேட்டு இருக்கின்றார்.

இது சம்பந்தமாக திருமாவளவன் தெரிவித்துள்ள பதில் வருமாறு பெண்கள் காலாகாலத்திற்கும் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் இதற்கு தலைமுறை தலைமுறையாக காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மனுதர்மம் எனப்படும் கருத்தியல் தான் காரணம் என்பதனை நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கின்றார்கள் அதிலும் அம்பேத்கர் பெண்களை இழிவுபடுத்தும் இந்த நூலை கொளுத்துவோம் என்று தெரிவித்தார் அதேபோல தந்தை பெரியாரும் இதே கருத்தினை தெரிவித்திருக்கின்றார்.

இதன் அடிப்படையிலே தான் ஒரு மாதத்திற்கு முன்னால் நடைபெற்ற ஒரு இணைய வழி கருத்தரங்கு ஒன்றில் மனு தர்மம் என்ற நூல் பெண்களை இழிவு படுத்துகின்றது என்று தெரிவித்திருந்தேன் அரசியல் ஆதாயம் தேடுகின்ற மதவெறி பிடித்த கூட்டங்களும் ஜாதி வெறி பிடித்த கூட்டங்களும் வேண்டுமென்றே எனக்கு எதிரான ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் பெண்களுக்கு எதிராக நான் பேசியது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அது முற்றிலுமாக உண்மையற்ற ஒரு தகவல் நாங்கள் பெண்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனை பொறுத்துக் கொள்ள இயலாத ஆணாதிக்கம் வெறி கொண்ட ஒரு கூட்டம் சில அவதூறான தகவல்களை பரப்பி வருகின்றது எங்கள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற சித்து விளையாட்டுகளை கையில் எடுத்து இருக்கின்றார்கள் இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் இதற்கெல்லாம் எதிராக நாம் நாட்டு மக்களை ஒன்றிணைத்து போராடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.