விஜயுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேனா? உண்மையை போட்டு உடைத்த திருமாவளவன் !!

Photo of author

By Sakthi

TVK-VCK:விசிக திருமாவளவன் மற்றும் தவெக விஜய் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற தகவலுக்கு விளக்கமளித்தார் திருமாவளவன்.

நடிகர் விஜய்,முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த மாதம் நடிகர் விஜய் அவர்கள் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டி, வி சாலையில் (27-10-2024) அன்று நடத்தினார்.  மேலும் விஜய் அவர்கள் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து இந்த மாநாட்டில் பேசி இருந்தார்.

தவெக கட்சியின் நோக்கம் என்ன?, அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மாநாட்டில் விஜய் நிகழ்த்திய உரை இருந்தது. இதில் ஆளும் திமுக அரசை எதிர்க்கும் வகையில் விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தாக்கும் வகையில் இருந்தது.

இந்த சூழல் நிலையில் தான் ஏப்ரல் 14 ஆம் தேதி விசிக திருமாவளவன் மற்றும் தவெக விஜய்  இருவரும் சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில்  புத்தக வெளியீட்டு விழா ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.

விஜய் மட்டுமல்ல ரஜினியும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார்கள்என்று விழா குழுவினர் தெரிவித்தனர். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது நிலவும் அரசியல் நிலைப்பாட்டால் அது குறித்து முன்னணி பொறுப்பாளர்களுடன் பேசி முடிவு எடுப்போம் என தெரிவித்தார் திருமாவளவன்.