Vanniarasu: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்கவில்லை, அதற்கான காரணம் குறித்து வன்னியரசு பேசியது சர்ச்சையாகி வருகிறது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் நேரடியாக திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார். இதுவரை விஜய் தவெக கட்சிக்கு ஆதரவு அளித்த திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றி விஜய் அரசியல் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் உடன் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்வினை புறக்கணித்து இருக்கிறார் திருமாவளவன். அவரது புறக்கணிப்புக்கு காரணம் திமுகதான் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமா பங்கு பெறவில்லை.
அதற்கான காரணத்தை யூடியூப் சேனலில் தெரிவித்து இருக்கிறார் வன்னியரசு. அதில் “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு கையில் அம்பேத்கர் புத்தகத்தையும், மற்றொரு கையில் பகவத் கீதை புத்தகத்தையும் வைத்துக் கொண்டு சமரச பாயாசம் கிண்டுகிறவர்.
அவர், உடன் மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என திருமா கூறினார் என தெரிவித்து இருக்கிறார். ஆனால் விசிக துணைப் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்காரை விட திமுக திருமாவிற்கு முக்கியமாகி விட்டது என்ற முரணா நிலைய்பாட்டில் உள்ளதாகத் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.