திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Photo of author

By Sakthi

மனுஸ்மிருதியை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றால், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வரவும் தயங்கமாட்டோம், என்று அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திக்கொண்டு செல்லும் தமிழக ஆளுநரை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் மனுஸ்மிருதியை விமர்சித்ததற்காக பாஜக மற்றும் காவி கும்பல்கள் எனக்கெதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கனவு பலிக்காது நாங்கள் நிச்சயமாக உறுதியாக பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்போம், எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை ஒருவேளை என்னால் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது திமுகவிற்கோ அல்லது கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த அணியில் இருக்கும் தலைவர்களின் ஒப்புதல் பெற்று கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

எங்கள் கொள்கையில் இருந்து ஒரு நாளும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் பாஜகவை எதிர்த்து போராடுவோம் விடுதலை சிறுத்தைகள் கட்சியா அல்லது பாரதிய ஜனதாவா என்று பார்த்துவிடலாம் என பேசி இருக்கின்றார் தொல் திருமாவளவன்.