தவெகவுடன் கூட்டணி- “பொறுத்திருந்து பாருங்க ” திருமா ஓபன் டாக்!!

Photo of author

By Sakthi

Thirumavalavan:தவெகவுடன் கூட்டணி குறித்து  செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு “பொறுத்து இருந்து பாருங்கள்” என பதில் அளித்தார் திருமாவளவன்.

திருமாவளவன் கூட்டணி குறித்த  கேள்விக்கு விசிக திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி வைக்கும் என்ற பதிலை உறுதியாக கொடுத்து வந்தார்.  இந்த நிலையில் தனது கூட்டணி குறித்து நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார். அதாவது நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்  திருமாவளவன்.

அப்போது செய்தியாளர்கள் திருமாவிடம்  வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் “பொறுத்து இருந்து பாருங்கள்” என பதில் தெரிவித்து இருந்தார். தவெகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அவர் மறுத்து பதில் அளிக்கவில்லை கூட்டணி குறித்து வரும் காலங்களில் முடிவு எடுப்போம் என்ற  வகையில் திருமா அளித்த பதில் இருந்தது.

தவெக கட்சி தொடங்கிய போது திருமா விஜய் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார். பின்னர் தவெக மாநாட்டில் விஜய் திமுக தான் அரசியல் எதிரி என அறிவித்த பிறகு திருமா தவெக  கொள்கை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா வின்  வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு இணைந்து அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வருகின்ற டிசம்பர்-6ஆம் தேதி சென்னையில் வெளியிடுகிறது.

அதற்கான புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் திருமா ஆகிய இருவரும் ஒரே மேடையில் பங்கு பெற இருக்கிறார்கள். அதற்கு திமுக மத்தியில் விருப்பம் இல்லை என தெரிய வருகிறது.