ஐயையோ அவங்க காலூன்றல! பாஜகவால் கதறும் திருமாவளவன்!

0
90

தமிழகத்தைப் பொருத்தவரையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மதம் மற்றும் சாதியிணைவைத்து அரசியல் செய்து வருவது உலகறிந்த கதை.

அதிலும் விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிரீதியான கட்சியை தன் கூட்டணிக்குள் நிரந்தரமாக வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக அவ்வப்போது அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான திமுக.

எப்பொழுதெல்லாம் திமுகவிற்கு தமிழகத்தில் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஜாதி பிரச்சனை தலைதூக்க தொடங்கும், இது காலகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தந்திரம் என்றால் மிகையாகாது.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் இந்துக்களையும், இந்து மத சடங்குகளையும், ஏளனமாக பேசி வருவது திமுகவிற்கும் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்து மதத்தை சார்ந்தவர் மக்களும் சரி, இந்துத்துவவாதிகளும் சரி, இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சாதிரீதியாக இருக்கும் வலிமை மதரீதியாக இல்லை என்றே கருதப்படுகிறது.

ஆனாலும் வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்த நாளிலிருந்து இன்று வரையில் அந்த கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்று ஆளும் கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், கூட்டணியில் இடம்பெற்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அவருடன் சென்னை, கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த 8 மாத கால திமுக அரசின் மதிப்பிற்கு மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் நம்பகத் தன்மைக்கும் பொதுமக்கள் வழங்கியிருக்கும் மாபெரும் பரிசு இந்த வெற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பதை தமிழகத்தில் பாஜக வலிமை பெறுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அதற்கு இங்கே வாய்ப்பில்லை என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

பாஜக என்றாலே மதவாத சக்தி என்று நாடு முழுவதிலும் சில தோற்றங்கள் ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு காரணம் திமுக போன்ற சில வெறுப்புணர்வு கட்சி தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டார்கள் என்று தெரிவிக்கும் ஒரு மாயை தமிழகம் முழுவதும் உலவிக் கொண்டிருக்கிறது.

திமுக தலைமையிலான கூட்டணி சமூகநீதி கூட்டணி, திமுக அரசு சமூக நீதி அரசு, ஆகவே தமிழகத்தில் அவர்களுக்கு துணை நிற்பவர்கள் மட்டுமல்ல சனாதன சக்திகளுக்கும் இடமில்லை என்று பொதுமக்கள் நிரூபித்திருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த வெற்றியை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்ருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.