அதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன்…! கருணை காட்டுமா அதிமுக தலைமை…!

Photo of author

By Sakthi

எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இப்போதிருக்கும் நிலையில் திமுகவுடன் சரி அதிமுகவுடன் சரி கூட்டணி வைக்கவே இயலாது என்ற சூழ்நிலையில் இருந்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்ற 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு காரணம் என்னவென்றால், சரியான தொகுதி பங்கீடு இல்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்பு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்தது அதற்கு பலனாக அந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சுமார் 10 இடங்கள் கிடைத்தன. ஆனால் ஒன்றில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறவில்லை அதன்பிறகும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து இருந்தது. அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சற்று ஆறுதல் அடைந்ததுடன், திமுக தலைமை கழகத்திடம் தன் இடத்தை உறுதி செய்துகொண்டது.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுத்தாலே போதும் என்ற மனநிலைக்கு திராவிட முன்னேற்ற கழகம் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகமாக பேரம் பேசுமானால், 7 தொகுதிகள் கொடுக்கலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டு இருப்பதாக தெரியவருகிறது. இதைத் தவிர திமுகவின் பல முக்கிய தலைவர்கள் அக்கட்சியுடன் கூட்டணி தேவை இல்லை என்று தெரிவிக்கிறார்கள். என்று பேசப்படுகிறது 10 தொகுதிகள் கொடுக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இருக்கிறதாம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனிடையே சென்ற முறை திராவிட முன்னேற்றக் கழகம் தந்த பத்து இடங்களை போல அதிமுகவில் 10 இடங்கள் கொடுத்தாள் அவர்களுடன் இணைந்து விடலாம் என்று திருமாவளவனிடம் யோசனை கூறி வருகிறார்களாம். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி குறித்து பிரச்சனை எழலாம் என்பதை முன்பே அறிந்து கொண்ட திருமாவளவன், இப்போது சிறிது காலமாக அதிமுகவை கடுமையாக தாக்கி எங்கும் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கூட தமிழக அரசை அவர் விமர்சிக்கவில்லை மாறாக புகழ்ந்து பேசியிருக்கிறார். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியை மனதில் வைத்துத்தான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் அதிமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிக்கல் ஏற்படும் ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் அதிமுகவிடம் அதிகமான இடங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் கொடுப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள். அதைத்தவிர இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறதாம், இதன் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க இயலாத சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.