ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்.. இதனை ஏற்க முடியாது என்றும் பிடிவாதம்!!

0
219
Thirumavalavan who protested against Stalin.. This cannot be accepted Stubbornness forever!!
Thirumavalavan who protested against Stalin.. This cannot be accepted Stubbornness forever!!

DMK VSK: 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14 ஆம் தேதி கூடிய சட்டசபையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பல்வேறு கட்சியை சேர்ந்த முன்னணி கட்சி தலைவர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது முதல்வர் ஸ்டாலினால் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அவர்கள் விரும்பினால் அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றி கொள்ளலாம். மேலும், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்படுகிறது.  புதிதாக உருவாகும் பல்கலைகழகங்கள் மாணவர்களின் படிப்பு திட்டம், பாடத்திட்டங்ககள், ஆசிரியர் ஊதியம் போன்றவற்றை அவர்களே நியமித்து கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

மேலும், உயர் கல்வி பறிபோவதால், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும், கல்வி கட்டணம் அதிகரிக்கும், அரசு உதவி பெரும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேர பாதிக்கப்படுவார்கள், இதனால் இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய திருமாவளவன்,  இந்த திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து வரும் விசிகவின் இந்த நிலை பாடு  திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

Previous articleடெல்லி மெட்ரோவில் ஆச்சரியம்: பயணியொருவர் கண்டெடுத்த ‘கண்டோம் பெட்டிகள்’ – “என்ன ஸ்டேஷன் இது?” என அதிர்ச்சி
Next articleசெந்தில் பாலாஜிக்கு எதிராக கிளம்பும் கழக குரல்.. திமுகவில் வெடிக்க போகும் பூகம்பம்!!