திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்!

Photo of author

By Sakthi

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாசேகர் கோவிலிருக்கிறது இந்த கோவிலில் தனி சன்னதியில் தோத்திரப்பூர்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது, திருஞானசம்பந்தருக்கு உபநயனம் திருமுறைகளில் தெருவீதி வலம் வரும் நிகழ்வு நடந்தது.

இதனையடுத்து மாப்பிள்ளை அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் தோத்திரப்பூர்ணபிகைக்கு மங்கல நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.