வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

Photo of author

By Sakthi

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது வருகின்ற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.39 மணிமுதல் மாலை 6.32 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, அன்றைய தினம் கோவில் நடை காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிவற்ற பிறகு இரவு 7:31 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஏழாம் தேதி பௌர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் அன்று மாலை 4 54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல சரியான நேரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.