ஆடிப்பெருக்கு! திருவையாறு காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை!

0
195

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றையதினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வருகின்ற எட்டாம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட காவிரி கரையில் அமைந்த இருக்கின்ற அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், வழிபாடு செய்வதற்கும், தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திருவையாறு துணை காவல் துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleஅருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!
Next articleஅனைத்து ஞானமும் அருளும் சரஸ்வதி நமஸ்துதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here