ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆடிப்பூர தெப்ப உற்சவம்!

0
311

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சாமியும், அம்பாளும், ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தப்ப உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 5.30 மணியளவில் கோவில் வளாகத்தில் இருக்கின்ற சூரிய தீர்த்த தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், ஏக சிம்மாசனத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

அதன் பிறகு அவர்கள் 5 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர் பின்னர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகள் அங்கு இருக்கக்கூடிய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.

Previous articleதனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.
Next articleபட்டதாரி இளைஞர்களே இந்திய கடற்படையில் உங்களுக்காக காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!